Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தி இசை விழாவை நிறுத்தியே தீருவோம் - வன்னி அரசு, வேல்முருகன், மாறன் உறுதி

Subscribe to Oneindia Tamil

லைகா நிறுவனத்தின் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த விடமாட்டோம்... கடும் எதிர்ப்பு காட்டியே தீருவோம் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள், முற்போக்கு மாணவர் முன்னணி ஆகியவை அறிவித்துள்ளன.

கத்தி படத்தை எங்கள் பேனரில்தான் வெளியிடுவோம் என ராஜபக்சவின் தொழில்கூட்டாளி எனப்படும் லைகா நிறுவனம் மல்லு கட்டிக்கொண்டிருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கத்தி படத்துக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளன.

ஆனால் இந்த எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே கருதாத லைகா சுபாஸ்கரன், முடிந்தவரை பணத்தாலடிக்கும் வேலையில் இறங்கி்யுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Tamil organisations announce protest against Kaththi audio launch

இந்த நிலையில், இன்றுவரை கத்தி எதிர்ப்பு நிலையில் உறுதியுடன் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், முற்போக்கு மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மாறன் ஆகியோர், இன்று மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள்

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறுகையில்,

"ராஜபக்சேவின் ஆதரவு பெற்ற நிறுவனம்தான் லைக்கா நிறுவனம். இது நூறு சதவீத உண்மை. இந்த உண்மையை மூடி மறைக்க முயல்கிறார்கள். ஆதரவு இல்லை என்றால், எதற்காக இலங்கை அரசுடன் வியாபாரம் செய்து வருகிறார்கள்? நாங்கள் முன்வைப்பது ஒன்றுதான். இலங்கை அரசுடன் தொழில் செய்துவரும் லைக்கா நிறுவனம் தமிழ் திரையுலகில் கால் ஊன்றக் கூடாது.

"இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்திருக்கிறோம். அதில், ‘கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற அனுமதிக்கக் கூடாது என்றும், இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். அதையும் மீறி ‘கத்தி' இசை வெளியீட்டு விழா நடைபெற்றால், அவ்விழா அரங்கினை முற்றுகையிடுவோம்.

"தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பில், 100-க்கும் அதிகமான அமைப்புகளும், கட்சிகளும் தமிழக மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து அமைப்பினரும், கட்சியினரும் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பார்கள்," என்றார் வன்னி அரசு.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளருமான வேல்முருகன் கூறுகையில், "லைகாகாரர்கள் என்ன முயன்றாலும் எங்கள் எதிர்ப்பை முறியடிக்க முடியாது.

கத்தி படத்திலிருந்து அவர்கள் விலக வேண்டும். இன்றைக்கு பாடல் வெளியீட்டை நடத்தவும் விடமாட்டோம். படத்தை யார் வாங்கியிருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்கள் போராட்டம் தொடரும். படத்தை நிறுத்தியே தீருவோம்," என்றார்.

மாணவர்கள்

முற்போக்கு மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மாறன் கூறுகையில்,

"தமிழக சட்டப் பேரவையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கும் நிலையில், ராஜபக்சேவின் குடும்பத்துடன் நேரடி தொழிலுறவு வைத்திருக்கும் லைக்கா நிறுவனம், ‘கத்தி' பட தயாரிப்பை கைவிட்டுவிட்டு, உடனடியாக தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

"மேலும், தமிழக சட்டப் பேரவை தீர்மானத்துக்கும், தமிழக மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து, நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் ‘கத்தி' இசை வெளியீட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும். அப்படி அவர்கள் புறக்கணிக்க மறுத்து, விழாவில் கலந்துகொள்ள முற்பட்டால், கடும் போராட்டத்தை முன்னெடுப்போம். பாடல்கள் வெளியீட்டை அதிரடியாய் தடுப்போம் என்பதை மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக, இன்று இசை வெளியீட்டு விழா நடைபெறும் லீலா பேலஸ் ஹோட்டல் மற்றும் அந்தப் பகுதிக்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+