ஜெயலலிதாவின் புரட்சிகர உத்தரவுகள்.. வேல்முருகன் பாராட்டு
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளின்படி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துதல், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளிட்டுள்ள அறிக்கை,

தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதாவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வராக பதவியேற்ற உடனேயே தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் புரட்சிகரமான உத்தரவுகளை பிறப்பித்து வாக்களித்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்,
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்து வரும் கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடவும் மது கடைகளின் நேரம் திறப்பை காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி என குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறார்.
இதேபோல் விவசாயிகளின் அனைத்து வகையான ரூ.5780 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி. வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம், கைத்தறிகளுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கிடும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்
மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராமுக்கு பதிலாக 8 கிராம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான இத்தகைய புரட்சிகரமான உத்தரவுகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்விற்கு வாழ்வுரிமைக் கட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications