மன உளைச்சல் போயிருச்சு... மதிமுகவுக்காக தமிழருவிமணியன் 10 நாட்கள் பிரசாரம்
சென்னை: மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து காந்தீய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பத்து நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக பிரசாரம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன். கூட்டணி அமைந்த பிறகு தமிழருவி மணியன் ஒதுங்கி இருந்தார். பிரசாரத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கூறி இருந்தார்.
இப்போது அவர் தேர்தல் பிரசாரத்தில் இறங்க முடிவு செய்து இருக்கிறார். 10 நாட்கள் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் உள்ளதாக காந்திய மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ பெரும்புதூர் தொடங்கி
தமிழருவிமணியன் 9 நாட்கள் ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். வருகிற 4-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் தமிழருவி மணியன், 5, 7 தேதிகளில் காஞ்சீபுரம், ஈரோட்டில் ம.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தூத்துத்துக்குடியில் பிரசாரம்
12-ந்தேதி தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார். 17, 18-ந்தேதிகளில் தேனி, தென்காசி தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

3 நாட்கள் வைகோவிற்கு
19, 20, 21 ஆகிய 3 நாட்கள் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து விருதுநகர் தொகுதியில் ஓட்டு கேட்கிறார்.

பாஜகவிற்கு ஒருநாள்
இந்த மாதம் 11-ந்தேதி மட்டும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழருவி மணியன் பிரசாரம் செய்கிறார்.

மன உளைச்சல்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோவையில் பேசிய தமிழருவி மணியன், பாஜக கூட்டணி சுயநலக்கூட்டணி என்றும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications