முதல்வர் வேட்பாளராக விஜயகாந்துக்கு என்ன தகுதியுள்ளது?: தமிழருவி மணியன்
சென்னை: திராவிட கட்சிகளை போல குடும்ப கட்சி நடத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மக்கள் நல கூட்டணி எதற்காக முதல்வர் வேட்பாளராக அறிவித்தது என்று, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 124 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 4 கட்சிகளும் சேர்ந்து 110 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழருவி மணியன் தெரிவித்த கருத்து: திமுக எப்படியாவது விஜயகாந்த்தை தன் பக்கம் வரவழைத்து அவர் வைத்திருக்க கூடிய 5 சதவீத வாக்குகளை தன்னோடு சேர்த்து ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கலைந்திருக்கிறது. அந்த கனவு கலைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
அதே நேரத்தில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், இனி மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியலை வளர்ந்தெடுக்கும் கூட்டணி என்று வாய் திறந்து பேச முடியாது.
விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அக்கூட்டணி முன்னிறுத்தியது தேவையற்றது. திராவிட கட்சிகளை போலவே குடும்ப கட்சி நடத்துபவர் விஜயகாந்த். துதிபாடும் அரசியல் நடத்துபவர் விஜயகாந்த். அப்படியிருக்கும்போது, அவரை எப்படி இக்கட்சிகளுக்கு மாற்றாக கருத முடியும்?
மக்கள் நல கூட்டணி தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டுள்ளதைத்தான் இந்த கூட்டணி காட்டுகிறது. வைகோவின் வீழ்ச்சி கண்கூடாக தெரிகிறது. இன்றுபவுர்ணமி, நாளை முதல் தேய்பிறை. அதன் பிறகு அமாவாசை என்பதால் இனி இந்த கூட்டணிக்கு இருண்ட காலம் தான். இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications