குடியரசுத் தலைவர் தேர்தலை அரசியலாக்குகிறது காங்கிரஸ்.. தமிழிசை புலம்பல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் அரசியலாக்குவதாக தமிழக பாஜக தலைவங்ர தமிழிசை சவுந்தர் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். ராம்நாத் கோவிந்திற்கு அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Tamilisai accuses that Congress party making politics in Presidential election

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.

பீகார் ஆளுநராக இருந்த ராம் நாத் கோவிந்தை, குடியரசுத் தலைவர் வேட்பாளராக பா.ஜ கூட்டணி அறிவித்தது.

அவரை எதிராக எதிர்க்கட்சிகள் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை நேற்று அறிவித்தன. அவரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் நேற்று ஒருமனதாக தேர்வு செய்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் அரசியலாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu BJP leader Tamilisai accuses that Congress party making politics in Presidential election.She said ADMK's Two teams support has increased the Chance of BJP's Victory in the presidential election.
Please Wait while comments are loading...