தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாஜக தான்...சொல்கிறார் தமிழிசை !
சென்னை: தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பா.ஜ.க. தான். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணம் நாடகம் என்று வைகோ கூறியுள்ளார். எப்போதும் நாடகம் நடத்தி கொண்டிருக்கும் வைகோவுக்கு எல்லாமும் நாடகமாகத்தான் தெரிகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சரியான வெளியுறவு கொள்கையை நிலைநிறுத்தி விட்டு வந்துள்ளார். அதை நாடகம் என்று சொன்னால் வைகோவின் பார்வைக்கு உண்மை எது என்று தெரியவில்லை, அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை, அவரின் அங்கீகாரத்திற்காகவும் நாங்கள் காத்திருக்கவும் இல்லை என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications