கூலிப்படைகளை காலி செய்யுங்கள்.. தமிழிசை ஆவேசம்!
சென்னை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் பெருகி விட்டது. கூலிப்படைகளே இல்லாத அளவுக்கு அவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகருக்குள் ஒன்று அல்லது இரண்டு கொலைகள், தினமும் நடக்குமென்பது எழுதப்படாத விதியாகி விட்டது. சென்னை கோடம்பாக்கத்தில், உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் முருகன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னை நகர மக்களை மட்டுமின்றி தமிழக மக்களையே ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய படுகொலைகள் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மக்களுடைய நியாயத்துக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது. இந்த மாதிரி கொலை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக மிக சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள்.
கூலிப் படைகளை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் மிகக் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழிசை கூறியுள்ள வழக்கறிஞர் முருகன் படுகொலையை, அவரது மனைவிதான் திட்டமிட்டு நடத்தியுள்ளார். தனது கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவரை மனைவியே கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications