விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இன்று காலையில் மேளதாளம் முழங்க சாலிகிராமத்தில் உள்ள மண்டல அலுவகலத்திற்கு ஊர்வலமாக வந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

12 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவாகரிடம் தனது வேட்பு மனுவை வழங்கிய தமிழிசை உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
பணம் கொடுக்க மாட்டோம், பொருளை கொடுக்கமாட்டோம் என்று உறுதி மொழியை வைத்துள்ளனர். வாக்காளர்களை வசப்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை படிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வேண்டும்.
தேர்தல் விதிமுறையிலேயே கட்டாயமாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த உறுதிமொழியை நேர்மையாக எடுத்தோம்
ஜனநாயகத்தின் தலைவர்கள் எளிய மக்கள்தான். இந்த தொகுதியைச் சேர்ந்த எளிய பெண்மணியைத்தான் முன்மொழியச் செய்தேன் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறினார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துவங்கிய வேட்பு மனுதாக்கல் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications