மகா, ஹரியானா வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றி.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்குக் காரணம் மோடி அரசுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வெற்றியே என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. இந்த இருமாநிலத் தேர்தல் வெற்றிகள் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றார் தமிழிசை.
மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. அதேசமயம், ஹரியானாவில் அது தனிப் பெரும்பான்மை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications