ஆட்சி கனவில் ஸ்டாலின் திருமாவை அழைப்பதும் மண்டியிடுவது தானா?: தமிழிசை
சென்னை: மக்கள் நலனுக்கு மத்திய, மாநில ஆட்சிகள் இணைந்து செயல்படுவதை மண்டியிடுவது என்றால் ஆட்சி கனவில் ஸ்டாலின் திருமாவை அழைப்பதும் மண்டியிடுவது தானா? என்கிறார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை வேப்பேரியில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

திமுக ஆட்சியில் இருந்த வரைக்கும் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை பற்றி கண்டு கொள்ளாமல் மண்டியிட்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மக்கள் நலனுக்கு மத்திய, மாநில ஆட்சிகள் இணைந்து செயல்படுவதை மண்டியிடுவது என்றால் ஆட்சி கனவில் ஸ்டாலின் திருமாவை அழைப்பதும் மண்டியிடுவது தானா? என்றார்.
மக்கள் நலனுக்கு மத்திய, மாநில ஆட்சிகள் இணைந்து செயல்படுவதை மண்டியிடுவது என்றால் ஆட்சி கனவில் ஸ்டாலின் திருமாவை அழைப்பதும் மண்டியிடுவது தானா?
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) July 30, 2017


Click it and Unblock the Notifications
