மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை... நிதி கொடுக்கிறார்கள் - தமிழிசை சப்பைக்கட்டு
மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழக மக்களிடம் பாரபட்சமாக நடந்துக்கொள்ளவில்லை என தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு இந்த ரூ.1,748 கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. முன்னதாக வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க மத்தியக் குழு பரிந்துரை செய்தது.

தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியோ ரூ.1,748.28 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்தது.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது ஆனால் வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர். மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து நிர்வாக ரீதியாக பணம் வந்துகொண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு மத்திய அரசு கொடுத்த பணம் எப்படி செலவிடப்பட்டது என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிலுவைத்தொகையை தமிழக அரசு விவசாயிகளுக்கு தரவில்லை அதனால் போராட்டம் நடைபெற்றது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு செய்வதற்காக கொடுத்த தொகை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
ரூ. 40000 கோடி கேட்பது நமது உரிமை என்றும் மத்திய அரசு ஆய்வு செய்து நிதி வழங்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications