சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள்.. விடாமல் மல்லுக்கட்டும் தமிழிசை!
சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.
சென்னை: சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தற்கு பாஜக தான் காரணம் என தினகரன் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
சின்னப்பிள்ளைகள்தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவர் முயற்சி செய்யாத ஒன்றை
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
முயற்சி செய்ததாக சொல்வது முதிர்ச்சியின்மைதானே https://t.co/Zikukeupu0
அதாவது இரட்டை இலைச்'சின்னம்' பாஜக வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என டிவிட்டரில் குறிப்பிட்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதற்கு டிவிட்டர் வாயிலாகவே பதில் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள் என்றார்.
இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு தமிழிசை மீண்டும் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சின்னப்பிள்ளைகள்தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். முயற்சி செய்யாத ஒன்றை
முயற்சி செய்ததாக சொல்வது முதிர்ச்சியின்மைதானே என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications