விவசாயிகளின் பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் - தமிழிசை குற்றச்சாட்டு

விவசாயிகள் நாம் நினைப்பதைவிட மோசமான நிலையில் உள்ளார்கள் என்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரேல் போன்று செயற்கை மழை பெய்விப்பது போன்று உயர் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன் என்றார்.

நாகை விவசாயிகள் என்னிடம் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் முதல்வரிடம் கொடுத்துள்ளேன். இவற்றுக்கிடையே, விவசாயிகளுக்கு வறட்சி நிதி உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

விவசாயிகளுக்கு இழப்பீடு

விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயாவது இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும். மற்ற விவசாய தொழிலாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறேன்.

செயற்கை மழை

செயற்கை மழை

விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் போன்று செயற்கை மழை பெய்விப்பது போன்று உயர் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.

வறட்சி மாநிலம்

வறட்சி மாநிலம்

தமிழக அரசின் வறட்சி பாதிப்பு குறித்த ஆய்வுக் குழுவில் விவசாயிகளையும் இணைக்க வேண்டும். மத்திய அரசிடம், எங்கள் சார்பில் தமிழக விவசாயிகளின் பாதிப்பு குறித்து அறிக்கை கொடுக்க உள்ளோம். மேலும், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கும் படி மத்திய அரசை வலியுறுத்த உள்ளேன். இது தொடர்பாக மத்திய விவசாய துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கிடம் பேசியுள்ளேன் என்றும் தமிழிசை கூறினார்.

முதல்வர் உறுதி

முதல்வர் உறுதி

தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க கோரினேன், பயிர்காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வலியுறுத்தினேன். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்க எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+