கூட்டணிக் கட்சியை மோசமாக சித்தரிக்க வைகோவால்தான் முடியும்.. தமிழிசை காட்டம்
சென்னை: கூட்டணியில் உள்ள கட்சியை மோசமாக சித்தரிக்க வைகோவால் மட்டுமே முடியம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணிக்காக தேமுதிகவுடன் நாங்கள் பேரம் பேசியதாக வைகோ கூறுகிறார். இந்தப் பேச்சுக்காக அவருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது குற்றச்சாட்டால், தேமுதிகவை அவர் மோசமாக சித்தரித்துள்ளார். கூட்டணிக் கட்சியை மோசமாக சித்தரிக்க வைகோவால்தான் முடியும். விஜயகாந்த் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து உங்களுடன் சேர்ந்துள்ளார். அவரை நீங்கள் கொச்சைப்படுத்தலாமா.

அதிமுக உங்களுக்கு பணம் கொடுத்ததா என்று டிவி செய்தியாளர் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல் வைகோ வெளிநடப்பு செய்கிறார். செய்தியளரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் வாக் அவுட் செய்யும் வைகோ, தமிழக அரசியலை விட்டே வாக் அவுட் செய்யும் காலம் வரும்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையை ஏற்று தேர்தலை சந்திக்க விரும்புகிறவர்கள் வரலாம் என சொல்லி இருக்கிறோம். ஊழலுக்கு எதிராக போராடுவதால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தன்மையுடன் தேர்தலை சந்திக்கிறோம். அதிமுகவுக்கு நேரிடையான சவாலாக பாரதீய ஜனதா கட்சி இருக்கும்.
தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் அங்கம் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. ததமிழகத்தில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்துக்கு ஓட்டு கேட்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வர உள்ளனர்.
தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்துகின்ற கட்சியாக பாரதீய ஜனதா இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பல காரணங்களுக்காக தற்போது எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை. எங்களுடன் இணைந்து வர உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றனர். அது பாரதீய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் என்றார் அவர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications