For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதா மரணத்தை முன்வைத்து கொடூர அரசியல் செய்கிறார்கள்- தமிழிசை செளந்தரராஜன்

அனிதாவை போன்று மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்கள் யாரும் விபரீதமான, வருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

Tamilisai Soundarrajan expresses her condolences to Anitha's family

இதற்கு இரங்கல் தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், அரியலூர் மாணவி அனிதா உயிர் இழப்பைக்கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையையும் அடைந்தேன். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி துக்கத்தை பகிர்கிறேன்.

மாணவச்செல்வங்கள் இதுபோன்ற வருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டாம் என வேண்டுகிறேன். இதை வைத்து கொடூர அரசியல் செய்வது மாணவரின் எதிர்காலத்துக்கு எதிரானது என்று தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai soundarrajan expresses her condolence to Anitha's family and also advises students not to take these extreme steps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X