ஆவிக்கு பயப்படுவது போல் காவிக்கு பயப்படுகிறார்கள்... தமிழிசை பொளேர்
ஆவியை பார்த்து பயப்படுவது போல் காவியை பார்த்து பயப்படுகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கரூர்: ஆவியை பார்த்து பயப்படுவது போல் காவியை பார்த்து பயப்படுகிறார்கள் என கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்குழுவில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கரூரில் பாஜகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் மத்தியஇணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் ரகுசுந்தரராமன், இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பாஜக பொதுக்குழுவில் தமிழிசை பேசுகையில், பாஜக என்றால் பொறுமையாக இருப்பார்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் திருப்பி அடிக்கிற கூட்டம்தான்.
தமிழகத்தில் காவி ஆட்சி விரைவில் அமையும் காலம் வந்து விட்டது. ஆவியை பார்த்து பயப்படுவதுபோல இந்த காவியை பார்த்து பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
எதற்கு அஞ்சமாட்டேன். பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் என் உயிர் போகும் என்றார் தமிழிசை. இதைத் தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இணையதளத்தில் என்னை மோசமாக விமர்சிக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறியதற்கு ஆதாரத்தை வெளியிட திருமாவளவன் கேட்டது குறித்து தமிழிசையிடம் கேட்டதற்கு, பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது என்றார் தமிழிசை.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications