பேசாமல், தமிழிசையே ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடலாமே!?
கடந்த முறை பேசப்பட்டது போல் அல்லாமல் இம்முறை தமிழிசை சவுந்தரராஜனே பாஜக வேட்பாளராக போட்டியிடலாம்.
சென்னை: தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் பட படவென ஏதோ ஒரு பதிலை கொட்டிவிட்டு செல்கிற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியிலேயே களம் காணாலாம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
மத்தியில் பாஜக ஆட்சி... தமிழகத்தில் பாஜகவின் கண்ணசைவில் அதிமுக ஆட்சி. இதனால் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜன் தம்மை சர்வ வல்லமை பொருந்திய அனைத்துக்கும் தீர்வைத் தரக்கூடிய மாபெரும் தலைவராக கருதுகிறவர்.
ட்விட்டர், டிவி சேனல் பேட்டி என கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விட்டுவிடுவதில்லை என முடிவோடு இருக்கிறார். ஏற்கனவே எக்ஸ்டன்சனில் இருக்கும் தலைவர் பதவியை டெல்லி பறிப்பதற்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இட்லி கடை சோதனை முதல் குடிசை மாற்று வீடு சோதனை வரை அத்தனையும் அரங்கேற்றம் செய்கிறார் தமிழிசை.

ஆர்கே நகர் தேர்தல்
இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் விவகாரத்தில் தலையிடப் போய் ஆளை விடுங்கப்பா சாமீகளா என தலைதெறிக்க ஓட நேரிட்டது. இப்போது ஆர்கே நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

சமூக வாக்குகள்
கடந்த முறையே ஆர்கே நகர் தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. இத்தொகுதியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். அத்துடன் அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளும் கணிசமாக இருக்கிறது.

மீண்டும் தேர்தல்
ஆனால் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என தெரிந்தே கங்கை அமரனை களமிறக்கி பிரசாரம் செய்தார் தமிழிசை. இம்முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

சுய பரிசோதனை களம்
நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் அடாது விடாது சவால்விடும் தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக இதோ நானே களத்துக்கு வருகிறேன் என குதிக்கவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. டெபாசிட் கிடைக்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமக்கான செல்வாக்கு என்ன என்பதற்கான சுய பரிசோதனை களமாகக் கூட தமிழிசை சவுந்தரராஜன் இந்த பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

திவாகரன் வாக்கு
ஒருவேளை டெபாசிட்டுக்கும் அப்பால் கணிசமான வாக்குகள் கிடைத்துவிட்டால் கிடைத்தாலும் கிடைக்கக் கூடிய ‘முதல்வர் வேட்பாளர்' வாய்ப்பை ஏன் விடனும் டாக்டர்? என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வி. அதுவும் இரட்டை இலையுடன் கூடிய ஆலமரம் இருக்கையில் ‘திவாகரன்' எதேச்சையாக சொன்னதை நடைமுறைப்படுத்த முதல்வர் வேட்பாளராக முதல் படியாகவும் இருக்கட்டுமே என்கின்றனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications