கருணாநிதி பிறந்த நாளன்று தமிழிசை போட்ட ட்வீட்டால் சர்ச்சை!

சென்னை: உங்கள் சட்டையை நீங்களே கிழித்துக் கொள்வதும் திமுகவின் பரிணாம வளர்ச்சி என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அதிமுக கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது.
இந்த நிலையில் திமுக ஜனநாயக கடமையாற்றியதன் நினைவுகளை தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் திமுக கடந்த கால சட்டமன்ற ஜனநாயக கடமையாற்றிய நினைவுகள்? ஜெ.அடி உதை, ஆடை கிழிப்பு மைக்குகளும் மண்டைகளும் உடைப்பு, சட்டை வேட்டிகளோடு சேலை கிழித்தவரலாறு, போட்டி சபாநாயகராக மதியழகன்/ஆசனத்தில் அமர்ந்து அதையும் கிழித்த நீங்கள் தற்சமயம் உங்கள் சட்டையை நீங்களே கிழித்துக் கொள்வதுமே திமுகவின் பரிணாம வளர்ச்சி? என்று தமிழிசை தெரிவித்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
|
துளி இடமும்...
தொண்ட வத்தி கத்தினாலும் துளி இடமும் இங்கில்லை காவி வேடர்களுக்கு...
|
தாமரை மலருதா
ஆடு நனையுதுனு ஓநாய் கவலைப்பட கூடாது. தாமரை மலருதா னு குளத்தை எட்டிப் பார்க்கவும்
|
நோட்டாவை ஜெயிக்க முடியாது
நோட்டாவை ஜெயிக்க முடியாத கட்சிக்கு செம குசும்பு...
|
தமிழிசை வாழ்த்து
இந்த நிலையில் கருணாநிதிக்கு முதல் ஆளாக நேற்றைய தினமே தமிழிசை சௌந்தரராஜன் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழ் அறிஞர் திரு. கலைஞர் @kalaignar89 அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி, உடல் நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். @BJP4TamilNadu சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!