தோற்றாலும்.. ஓட்டுப் போட்டவர்களை மறக்காமல் நேரில் பார்த்து நன்றி சொன்ன தமிழிசை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தனக்கு வாக்களித்த 19 ஆயிரத்து 167 பேரை தேடிச் சென்று நன்றி தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில குட்டி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது. பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழிசை டெபாசிட் இழந்தார். மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவருக்கு 19 ஆயிரத்து 167 வாக்குகள் கிடைத்திருந்தது.
டெபாசிட் இழந்தாலும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அந்த 19 ஆயிரத்து 167 பேருக்கும் நேரில் நன்றி தெரிவிக்க தமிழிசை நேற்று இரவு விருகம்பாக்கத்திற்கு சென்றார். அவருடன் அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் சென்றிருந்தார்.
வாகனத்தில் நின்றபடி தமிழிசை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். படுதோல்வி அடைந்த தமிழிசை நன்றி தெரிவிக்க வந்ததை பார்த்து மக்கள் வியந்தனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications