இரட்டை இலையை முடக்கியது சரிதான்.. தமிழிசை சந்தோஷப்பட காரணம் இதுதானாம்
இரட்டை இலை சின்னத்தை முடக்கியது சரிதான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழசையின் இந்த மகிழ்ச்சி நீண்ட நாளைக்கு நிலைக்காது என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஊரு ரெண்டு பட்டா பூசாரிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. பாஜகவிற்கு நன்றாகவே பொருந்தும்.
அதுவும் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுக இரண்டாக உடைபட்டு நிற்கும் போது எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்றி விட பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, மோடி என பாஜகவினர் அவரவர் பங்கிற்கு வேலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சசிகலா அணியில் உள்ள எம்பி அன்வர்ராஜா நேரடியாகவே நேற்று பாஜகவை குற்றம்சாட்டி பேசினார். குறிப்பாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது குறித்து கடுமையாக சாடிய அவர், பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் வழியாக பாஜக
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் துணையோடு பாஜக தமிழகத்தில் காலடி வைக்க முயலுக்கிறது என்றும் நேரடியாக குற்றம்சாட்டினார். அதனால்தான் ஜெயலலிதாவின் இறப்பின் போது சென்னையில் முகாமிட்டிருந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஓபிஎஸ்ஸை முதல்வராக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார் என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார் அன்வர்ராஜா.

தமிழிசையின் எக்காளம்
அதுகேற்படியே, இரட்டை இலை முடக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பாஜக தமிழிசை சூப்பராக பதில் சொல்லி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதை காட்டிவிட்டார். "எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. எனவே, சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவுதான். தேர்தலுக்கு பின் அதிமுகவே முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று தமிழிசை சொல்வதன் உள்ளகிடக்கு என்ன என்பது குழந்தைக்கு கூட புரியும்.

டெல்லி விளையாட்டு
முறையாக தேர்தல் நடைபெற்று, தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக மக்களைவிட டெல்லி பாஜகவினருக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி அல்லது பிளவை ஏற்படுத்தி தமிழகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இயற்கையே இலையை முடக்கியதாம்..
இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது என்று கூச்சநாச்சம் இல்லாமல் தமிழிசை கூறியுள்ளார் என்று கூறிய அதிமுகவினர், இதுபோன்ற வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் தொடர்ந்து பாஜக இது போன்ற 3ம் தர வேலைகளில் ஈடுபடுவதால் அதற்குத்தான் நஷ்டம் என்றும் கூறினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர் என அனைத்தையும் முடக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்குதான்னு பார்ப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications