சட்டசபை தேர்தல்: தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அழைத்தது திமுக!
Recommended Video
சென்னை: சட்டசபை தேர்தல் வியூகங்களுக்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாத் கிஷோரை திமுக அழைத்திருப்பதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் ஸ்டாலினுக்கும் மக்களுக்குமான ஒரு நெருக்கம் இருப்பதாக காட்டப்பட்டது.

திமுகவினர் சொந்தமாக ஒரு வியூக அணி, ஐடி விங் என பல வகைகளில் செயல்பட்டு வந்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பிரசாந்த் கிஷோர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதிமுக தரப்பும் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக கூறப்படுகிறது.
அப்போது இதை திமுக அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையில் திமுக, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
திமுக ஆட்சி அமைக்காமல் போனால் அதன் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும். இதனால் பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியுள்ளது.
இது தொடர்பாக திமுக தரப்பு மற்றும் பிரசாந்த் கிஷோருடனான பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இது திமுக தலைமைக்கு புதிய தெம்பை கொடுத்திருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications