தமிழக சட்டசபை ஜூலை 10ம் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் அடுத்தமாதம் 10ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், பட்ஜெட் தாக்கலும், அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதமும் நடைபெற்றது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 16வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இது பற்றி சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26 (1)-ன்கீழ், பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஜூலை திங்கள் 10-ஆம் நாள் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications