கர்நாடக முறுக்கு கம்பெனியில் கொத்தடிமைகளாக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூவர் மீட்பு
மதுரை: கர்நாடக மாநிலத்தில் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர் மற்றும் மகனை போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது மள்ளப்புரம் காலனி. இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்லையா (45). இவருடைய மகன்கள் பிரபாகரன் (22), சக்தி (21). இவர்கள் இருவரையும் பேரையூர் தாலுகாவில் உள்ள அழகுரெட்டியபட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் முறுக்குப்போடும் கம்பெனியில் வேலை செய்வதற்காக தலா ரூ.50 ஆயிரம் தருவதாக கூறி கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த, சென்னபட்ணா என்ற நகருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வேலை பிடிக்காமல் பிரபாகரன் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். இந்தநிலையில் பிரபாகரனுடன் சென்ற 2வது மகன் சக்தியை தேடி செல்லையாவும் அவரது மனைவி பஞ்சவர்ணமும் சென்னபட்ணாவுக்கு சென்றனர்.
அங்குள்ள முறுக்கு கம்பெனிக்கு சென்ற அவர்கள் இருவரையும் மறுக்கு கம்பெனி முதலாளி பிடித்து வைத்துக் கொண்டுள்ளார். மூத்த மகனை ஒப்படைக்க வேண்டும். அதுவரை இருவரும் தங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவரையும் முறுக்கு கம்பெனி நடத்தியவர்கள் நிர்பந்தித்து கொத்தடிமைகளாக வேலை வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரியிடம் பிரபாகரன் புகார் செய்தார். அதில் தனது தம்பி மற்றும் பெற்றோரை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதுதொடர்பாக எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னபட்டணா நகரில் இருந்து செல்லையா, அவரது மனைவி பஞ்சவர்ணம், மகன் சக்தி ஆகிய 3பேரையும் மீட்டு வந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications