ஒருபக்கம் ஓபிஎஸ் பிரஸ் மீட்.. மறுபக்கம் ஆளுநரை சந்தித்து ஆலோசித்த முதல்வர்
Recommended Video

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளதாக காலையிலேயே அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இரவு 7.30 மணியளவில் சந்திப்பு நடந்தது.

இருப்பினும் இந்த சந்திப்பின் அஜென்டா, அதாவது என்ன உரையாடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 18 தகுதி நீக்கம் எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆளுநரை, முதல்வர் சந்தித்து உள்ளார் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
கருணாஸ் உள்ளிட்ட நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அதிமுக கொறடா மனு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து ஆளுநரிடம் முதல்வர் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த சந்திப்பு குறித்து பரபரப்பு நிலவியது.
இதனிடையே இரவு 7.10 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து, ராஜ்பவனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். 7.30 மணியளவில் துவங்கிய சந்திப்பு 8 மணிவரை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பிரஸ் மீட் அளித்துக் கொண்டிருந்தார். அவர், கடந்த வருடம், ஜூலை மாதம், தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று தனது பேட்டியில் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications