செங்கொடியோடு வந்த மக்கள்.. கூலிங் கிளாஸோடு இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கேரளாவில் பெரும் வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

கன்னூர்: கேரளாவில் சிபிஎம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கேரளாவில் இருக்கும் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் கட்சிக்கு நட்பாக இருக்கும் பல்வேறு தலைவர்களை தேசிய அளவில் இருந்து அழைக்க அக்கட்சி முடிவு செய்து இருந்தது.

இதில் ஒவ்வொருநாளும் முக்கியமான தலைவர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசி வருகிறார்கள். நேற்று சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் இந்த நிகழ்வில் இரண்டு மாநில வழிபாட்டு முறை தொடங்கி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.

கேரளா சிபிஎம்

கேரளா சிபிஎம்

இந்த நிலையில் இன்று நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள கேரள சிபிஎம் கட்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டது. கேரள அறநிலையத்துறை அமைச்சருமான கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து முதல்வரை சந்தித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

வரவேற்றார்

வரவேற்றார்

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வதாக கேரள சிபிஎம் கட்சியிடம் உறுதி அளித்தார். இந்த நிலையில் இன்று விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்றார். கண்ணூர் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வரை கேரளா அமைச்சர்கள் தலைமையிலான குழு வரவேற்றது. கேரளா அமைச்சர் எம்வி கோவிந்தன் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து சிவப்பு துண்டு போர்த்தி வரவேற்றார்.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்தபடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த சிபிஎம் தொண்டர்கள் சிவப்பு கொடி காட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதோடு ஸ்டாலினை வரவேற்க அங்கு பெரிய அளவில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் - முதல்வர் ஸ்டாலின் இருவரின் புகைப்படங்களை வைத்து கன்னூரில் சில இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன.

என்ன கூட்டம்?

என்ன கூட்டம்?

கண்ணூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள அரசு சார்பாக மதிய உணவு விருந்து அளிக்கப்பட உள்ளது. கேரள முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று மாலை அங்கு நடக்கும் சிபிஎம் கட்சி நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச இருக்கிறார். இதில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவு பற்றி உரையாடும் கூட்டம் ஆகும். இந்த நிகழ்வை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார். கண்ணூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள அரசு சார்பாக மத்திய உணவு விருந்து அளிக்கப்பட உள்ளது. கேரள முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று மாலை அங்கு நடக்கும் சிபிஎம் கட்சி நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச இருக்கிறார். இதில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவு பற்றி உரையாடும் கூட்டம் ஆகும். இந்த நிகழ்வை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+