தமிழகத்தில் மின் கட்டுப்பாடு தளர்வு... ஜெயலலிதா உத்தரவு
சென்னை : உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் காரணமாக தமிழகத்தின் மின் நிலைமை சீரடைந்துள்ளது. மின் வெட்டு என்பது பழங்கதையாகிப் போனது.

கடந்த நான்காண்டுகளில் 4991.5 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி வீடு மற்றும் ஏனைய தாழ் மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு இருந்து வந்த வரையறுக்கப்பட்ட மின்தடை கடந்த 1.6.2014 முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் 20 சதவீதமும், உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) 90 சதவீதமும் மின் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் அமலில் இருந்து வரும் 20 சதவீத மின் கட்டுப்பாடு வரும் 5.6.2015 முதல் முற்றிலுமாக நீக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) விளக்கு மற்றும் பாதுகாப்பிற்காக 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் உபயோகிக்கலாம் என்ற 90 சதவீத மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்திடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications