வேட்பு மனு நிராகரிப்புக்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை... முதல்வர் பழனிசாமி தெளிவான விளக்கம்!
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எங்களுக்கு தெரிந்த ஒரே வேட்பாளர் அதிமுக வேட்பாளர் தான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவின் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் யாரும் தலையிடவில்லை, வேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் அதைத் தான் இப்போதும் செய்துள்ளது. அதிகவினர் யாரும் தேர்தல் ஆணைய விதிகளை மீறி செயல்படக் கூடாது என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய நாடே ஆர்கே நகர் இடைத்தேர்தலை உற்றுநோக்கிப் பார்த்துக கொண்டிருக்கிறது. வலுவான இயக்கமான அதிமுக ஜெயலலிதா இல்லாத நிலையில் இன்று தேர்தலை சந்திக்கிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனணை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அதிமுகவின் கோட்டை ஆர்.கே நகர் என்பதை இந்த முறையும் நிரூபிக்க வேண்டும், கடந்த முறை இரண்டாக பிளவு பட்டு இருந்தோம். இந்த முறை ஒற்றுமையாக உள்ளோம், அந்த ஒற்றுமை தான் நமக்கு பலம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications