தொடர் மழை: சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலை உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: கனமழையின் காரணமாக சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அந்தந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக, நாளை முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதேபோல் வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக தேர்வு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த பல்கலைக் கழக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பேத்கார் சட்டபல்கலை கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் சட்டகல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சட்ட பல்கலை கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்திருந்தனர்.
பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில், மழை காரணமாக மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications