For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை மெர்சலாக்கும் டெங்கு... தமிழகத்தில் இன்றும் 8 பேர் பலி! #dengue

டெங்கு காய்ச்சலுக்கு இன்று மட்டும் தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சிவகங்ககை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களே.

சிவகங்கை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த செல்லபாண்டியன் என்பவரது மகள் பொன்னுத்தாயி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பொன்னுத்தாயி இன்று உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 13 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

 Tamilnadu faces 8 dengue deaths today

மாவட்டத்தில் போதுமான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படாததோடு, அரசு மருத்துவமனைகளில் இதுவரை சுகாதார வசதி செய்து தரப்படாததுமே காய்ச்சல் கட்டுப்படாததற்குக் காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்துள்ள பொட்டிச்செட்டிப்பட்டியை சேர்ந்த சிறுவன் பாவேந்திரன் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று காலையில் உயிரிழந்துள்ளான்.

நாமக்கல் மாவட்டம் கெண்டிச்சட்டிப்பட்டியை சேர்ந்த யோகேந்திரன் என்பவரது 5 வயது மகளான ரோஷினியும் டெங்குவிற்கு பலியாகியள்ளார். பழநியைச் சேர்ந்த ம் வகுப்பு மாணவி சந்தியா, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் காவியா என்ற 3 வயது சிறுமியும் கௌஷ்யா பேகம் என்ற இளம்பெண்ணும் டெங்குவிற்கு உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களத்தை சேர்ந்த அன்பு என்ற 6 வயது சிறுவனும் டெங்குவால் உயிரிழந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Various parts of Tamilnadu today too faced 8 numbers of Dengue deaths and the state is still in a critial condition to trigger out the killing disease Dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X