பிரதமரின் இந்த திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது தவிர்க்கப்படும்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று அவர் கூறுகையில், பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 படகுகள் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் 2,000 படகுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tamilnadu fishermen won't get sufferd, says minister Jayakumar

நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும். கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் உறுதியான கொள்கை, அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதே அரசின் நிலைப்பாடு. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அப்துல் கலாம் மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்றபோது, ராமேஸ்வரம் கடல் அமைதியாக இருந்தபோதிலும், மீனவர்கள் வாழ்வில் அமைதியில்லை என பிரதமர் மோடி முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu fishermen won't get suffers once PM's blue revolution get implemented, says minister Jayakumar.
Please Wait while comments are loading...