இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்... சென்னையில் நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது வெப்பசலனம் காரணமாகவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

Tamilnadu gets heavy rainfall

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 204 மி.மீ. ஆனால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை 179 மி.மீ. தான் மழை பெய்துள்ளது.

நெல்லை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டலத்தில் சுழற்சியும், வெப்பச்சலனமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மற்ற சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றார் அவர்.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+