நளினிக்கு பரோல் தரக் கூடாது... வெளிநாடு தப்பி செல்வாராம்- ஹைகோர்ட்டில் தமிழக அரசு
ராஜீவ்காந்தி கொலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு பரோல் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை : நளினிக்கு பரோல் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், அவரின் மனைவி நளினி உள்ளிட்டோர் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். நளினி தன்னுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து அவருக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இதனையடுத்து 26 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் லண்டனில் படிப்பதாகவும் அவருக்கான திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உள்துறை, சிறைத்துறை சார்பாக கூட்டாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நளினி செய்தது அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றம். அவருக்கு பரோல் அளித்தால் அவர் தப்பி சென்றுவிடக் கூடும் என்பதால் அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய விசாரணையின் போது இரு தரப்பு வாதத்தையும் கேட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications