ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் மாற்றம்: 4 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுள் 4 பேர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தூத்துக்குடி சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் அருண் சக்தி குமார் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெறுகிறார். மதுரை நகர சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி.யாக நியமிக்கப்பட உள்ளார்.

Tamilnadu government transfer 12 IPs officers

கமுதி சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் மதுரை அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் ஜியார்ஜி ஜியார்ஜ் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சேலம் சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி.யாக நியமிக்கபட்டுள்ளார்.

தூத்துக்குடி ரூரல் சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் எஸ். தீபா கணிஜெர் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை வீடியோ பைரஸி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கபட்டுள்ளார்.

எஸ். என். உமையாள் மதுரை அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் பட்டாலியன் திருச்சியில் கமாண்டென்ட்டாக நியமிக்கபட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் பட்டாலியன் திருச்சி கமாண்டென்ட்டான எம். விஜயலெட்சுமி ஐ.பி.எஸ். சென்னை சமூக நலம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 11வது பட்டாலியன், கமாண்டென்ட் ஆர். சின்னசாமி ஐ.பி.எஸ். திருப்பூர் நகர போலீஸ் தலைமையகத்தில் டி.சி.யாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் நகரம் சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி. எஸ். செல்வராஜ் மதுரை திருப்பூர் நகர போலீஸ் தலைமையகத்தில் டி.சி.யாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம் செய்யபப்பட்டுள்ளார்.

சென்னை வீடியோ பைரஸி போலீஸ் சூப்பிரண்ட் திருமதி. எச். ஜெயலட்சுமி சென்னை மத்திய சரகம் லஞ்சத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக, தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம் செய்யபட்டுள்ளார்.

கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்ட திருமதி. பி. கண்ணம்மாள் போலீஸ் சூப்பிரண்ட் சென்னை போலீஸ் தலைமையகத்தில் திருமதி. பி.ஆர். வெண்மதி ஐ.பி.எஸ். இடத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸாக நியமனம் செய்யபட்டுள்ளார்.

சென்னை போலீஸ் தலைமையகத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸாக உள்ள திருமதி. பி.ஆர். வெண்மதி ஐ.பி.எஸ். தமிழ்நாடு கமாண்டோ போலீஸ் பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்ட திருமதி. வந்திதா பாண்டே போலீஸ் சூப்பிரண்ட், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை 11வது பட்டாலியன் கமாண்டென்ட்டாக நியமனம் செய்யபட்டுள்ளார்" என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+