அப்பல்லோ வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. ஜெ. உடல்நிலை பற்றி 25 நிமிடங்கள் கேட்டறிந்தார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து சுமார் 25 நிமிடங்கள் டாக்டர்களிடம் பேசிவிட்டு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வதந்திகள் உச்சநிலைக்கு சென்ற காலகட்டத்தில், அவற்றுக்கு முடிவு கட்டும்விதமாக அக்டோபர் 1ம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரித்து திரும்பினார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

பொறுப்பு ஆளுநர் வருகைக்கு பிறகுதான் வதந்திகள் பெருமளவுக்கு குறைந்தன. அப்பல்லோ அறிக்கையிலும், மேலதிக தகவல்கள் வெளியாக தொடங்கின. இந்த நிலையில், ஜெயலலிதா தற்போது பூரண நலமடைந்துவிட்டதாக அப்பல்லோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா, சகஜமாக பேசுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குள் சென்றார். அப்பல்லோவிற்குள் சென்ற பொறுப்பு ஆளுநர், டாக்டர்களிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
Chennai: Tamil Nadu governor C Vidyasagar Rao visits TN CM Jayalalithaa in Apollo pic.twitter.com/C3QBz166Fa
— ANI (@ANI_news) October 22, 2016
கடந்த முறை மருத்துவமனை சென்றபோது ஜெயலலிதாவை சந்திக்க மருத்துவர்கள் அனுமதித்ததாகவும், தான், சந்திக்கவில்லை எனவும் பொறுப்பு ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சுமார் 25 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ஆளுநர் அதன்பிறகு ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications