தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications