இரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு நன்றி!... ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!
இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை : இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.
ஏப்ரல் மாதம் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 7 மாத இழுபறிக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாக குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்ததை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவதாக ஓ.பிஎஸ், ஈபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போன்று எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்திலும் இருவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவினர் வருகையையொட்டி ஜெயலலிதா சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சரோஜா, நிலோபர் கபில், சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் ஜெயலலிதா சமாதி முன்பு அஞ்சலி செலுத்தினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications