இனிதாக முடிந்த தீபாவளி... மழையால் விபத்துக்கள் குறைவு
சென்னை: நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மழை காரணமாக பட்டாசுகளால் உண்டாகும் பெரிய அளவில் விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் களை இழந்துக் காணப்பட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளெமென ஓடியதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென மழை அளவு குறைந்தது. இதனால் மக்கள் ஆர்வமாக கடைவீதிகளுக்குச் சென்று வந்தனர். பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபாவளிப் பண்டிகையான நேற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் லேசான தூறலுடன் வெயிலும் அடித்ததால், பட்டாசுகள் வெடித்து புத்தாடைகள் அணிந்து மக்கள் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடினர்.
தீபாவளியை முன்னிட்டு பல ஆலயங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு மக்கள் வழிபாடு செய்தனர்.
ஆனால், தென் மாவட்டங்களின் சில இடங்களில் நேற்றும் மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனபோதும், புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் உண்டும் அவர்கள் தீபாவளியைக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, தீபாவளியை ஒட்டி விடுமுறையில் செல்லாமல் தீயணைப்புத் துறையினர் அனைவரும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தயார் நிலையில் அவசர கால ஆம்புலன்ஸுகளும் ஆங்காங்கே நிறுத்தப் பட்டிருந்தன. ஆனபோதும் மழை காரணமாக பட்டாசுகளால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications