மக்களே, மழைக்கு இதமான உங்கள் ஃபேவரைட் ஸ்நாக்ஸ் எது? ஓன்இந்தியா தமிழ் ஜாலி சர்வே ரிசல்ட் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சில்லிட வைக்கும் குளிர், இதமான மழை, திடீர் இடியோசை, இந்த ரம்யமான சூழ்நிலை சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், மக்களின் மனம் உடனே நாடி ஓடுவது நொறுக்குத் தீனிகள் மீதுதான். என்னதான் பாக்கெட் ஃபுட்கள் வந்துவிட்டுவிட்டாலும் கூட பாரம்பரியமாக எண்ணையில் பொறித்து சாப்பிடும் தின்பண்டங்கள் மீது அலாதி பிரியம் இருக்கும்.

இந்த தின்பண்டங்களோடு, சுடச்சுட டீ, காபி பருகியபடியே மழையை ரசிப்பதில் அலாதி பிரியம் உண்டு.

பஜ்ஜி டூ பருப்பு வடை

பஜ்ஜி டூ பருப்பு வடை

உங்களுக்கு எந்த தின்பண்டம் மீது அலாதி பிரியம் என்று அறிய, 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினோம். அதில், பருப்புவடை, உளுந்துவடை, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, மிக்சர், டீ/காபி ஆகிய ஆப்ஷன்கள் தரப்பட்டன.

முதலிடம் எதற்கு தெரியுமா?

முதலிடம் எதற்கு தெரியுமா?

இதில் அதிகம்பேர் வாக்களித்து முதலிடத்தில் இருப்பது சூடா காபி அல்லது டீ போதும் என்போர்தான். ஒருவேளை வாக்களித்த வாசகர்களில் பெரும்பாலானோர் டயட்டில் இருக்கிறார்களோ என்னவோ? அல்லது சிறு வயது முதலே இதுதான் அவர்களின் ஃபேவரைட் சாய்ஸ்சாக இருந்திருக்க வேண்டும். மாலை நிலவரப்படி, 32.5 சதவீதம் பேர் இதுவே போதும்ப்பா என வாக்களித்துள்ளனர்.

தெறிக்கும் காரம், நொறுக்க உதவும்

தெறிக்கும் காரம், நொறுக்க உதவும்

நொறுக்கு தீனி என்று பார்த்தால் அதில் முதலிடம் மிளகாய் பஜ்ஜிக்கு. குளிருக்கு சூடேற்ற நறுக்கென்ற காரம் தேவைப்படுகிறது மக்களுக்கு. இதனால்தான் மிளகாய் பஜ்ஜிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. மிளகாய் பஜ்ஜி 24.53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

வாழைக்காய் பஜ்ஜி அபாரம்

வாழைக்காய் பஜ்ஜி அபாரம்

வாழைக்காய் பஜ்ஜி மட்டும் இளைத்தது கிடையாதே. மிக நெருக்கத்தில் 21.67 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. பயப்படாதீங்கப்பா, என்றோ ஒருநாள் சாப்பிட்டால் காஸ் பிரச்சினையெல்லாம் வராது.

பருப்பு வடை பெஸ்ட்

பருப்பு வடை பெஸ்ட்

வடைகளில் பருப்பு வடைக்குதான் அமோக ஆதரவு. 9.22 சதவீதம் பேர் பருப்பு வடையை சுவைத்தபடிதான் இந்த கிளைமேட்டை அனுபவிப்பார்களாம். அடுத்த இடம் உளுந்துவடைக்கு. 6.85 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். மிக்சர்தான் என்போர் 5.23 சதவீதம் பேராகும். அப்புறமென்ன, நீங்களும் பிடித்த டிஷ்ஷை சாப்பிட்டபடி மழையை அனுபவியுங்கள், ஜாக்கிரதையாக.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu people like to have tea, coffee at rainy season, Oneindia Tamil poll reveals.
Please Wait while comments are loading...