காவிரி பிரச்சினையால் பற்றி எரிகிறது தமிழகம்.. கர்நாடக பஸ்களை திருப்பியனுப்பிய போலீசார்
ஈரோடு: தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது தமிழக பேருந்துகள் தாக்கப்பட்டது இதை தொடர்ந்து தமிழக பஸ்கள் கர்நாடகாவுக்கு செல்வது கடந்த மாதம் 9ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே போல் கர்நாடகா பேருந்துகள் தமிழகம் வருவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் பதற்றம் குறைந்ததையடுத்து, ஒரு மாதத்திற்கு பிறகு, இன்று இரு மாநிலங்கள் இடையே இன்று வாகன போக்குவரத்து தொடங்கியது.

கர்நாடகாவிற்குள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. ஒசூர் எல்லையிலிருந்து பெங்களூருக்கு வாகனங்கள் செல்கின்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கர்நாடகா எல்லையில் கர்நாடகா எல்லையான புளுஞ்சூர் வரை கர்நாடகா பேருந்துகள் கடந்த 25 நாட்களாக வந்து சென்றது இன்று கர்நாடக பேருந்துகள் புளுஞ் சூரிலிருந்து தமிழக பகுதியாள சத்தியமங்கலம் நோக்கி நான்கு கர்நாடக பேருந்துகள் வந்தது. தமிழக மலைப் பகுதியான ஆசனூர் செக்போஸ்டில் இருந்த தமிழக போலீசார் கர்நாடகா பஸ்களை தடுத்து நிறுத்தி காவிரி பிரச்சனையில் இன்னமும் சுமூகமான நிலை ஏற்படவில்லை என்பதால் தேவையற்ற அசம்பாவிதத்தை தவிர்க்க கர்நாடகா பேருந்துகளை மீண்டும் கர்நாடகாவுக்கே அனுப்பி வைத்தார்.
பஸ்களில் வந்த பயணிகள் தமிழக பேருந்துகள் மூலம் சத்தியமங்கலம் வந்தனர். இதுவரை கன்னட அமைப்பினர் போராட்டத்தால் தமிழக வாகனங்கள் அம்மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை. இப்போது தமிழகத்தில் போராட்டம் உக்கிரமாக இருப்பதால், கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாத நிலையுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications