தமிழக காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அரசியல்வாதிகள்!!
தமிழக காவல்துறை அதிகாரிகளை அரசியல்வாதிகள் அசிங்கப்படுத்துவதும் அவர்களை அநாகரிகமாக பேசுவதும் தொடர்கதையாகி உள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக காவல்துறை அதிகாரிகளை அரசியல்வாதிகள் அசிங்கப்படுத்துவதும் அவர்களை அநாகரிகமாக பேசுவதும் தொடர்கதையாகி உள்ளது.
அண்மை காலமாக அரசியல்வாதிகள் பொதுமக்கள் முன்னிலையிலும் மேடைபோட்டும் காவல்துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முக்குலத்தோர் படைத் தலைவர் கருணாஸ் தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை சரமாரியாக விளாசினார்.

யூனிபார்ம கழட்டி வச்சுட்டு வா
டவுசரை கழட்டியிருப்பேன், காக்கிச்சட்டையை கழட்டிவிட்டு என்னுடன் மோத தயாரா என்றும் பல்வேறு சவால்களை விடுத்தார் கருணாஸ். காவல்துறை அதிகாரி என்று யோசிக்காமல் சகட்டு மேனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தைரியம் இருந்தால்
ஏற்கனவே பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழக பாஜக நிர்வாகி எஸ்வி சேகர் தைரியம் இருந்தால் காவல்துறை என்னை கைது செய்யட்டும். நான் சென்னையில் தான் இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

லஞ்சம் பெற்றுக்கொண்டு
அவரைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறை ஊழலில் திளைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். காவல்துறை அதிகாரிகள் கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமியர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகின்றனர் என்றார்.

அசிங்கப்படுத்திய எச் ராஜா
வெட்கமா இல்லையா? யூனிஃபார்ம் போட உங்களுக்கு வெட்கமா இல்லையா? டிஜிபி வீட்டில் ரெய்டு நடக்கிறது. புழல் சிறையில் கைதிகளுக்கு டிவிக்கள் உள்ளன. எல்லாம் லஞ்சம், லஞ்சம் வேண்டுமானால் நான் தருகிறேன் என அசிங்கப்படுத்தினார் எச் ராஜா.

மேடையில் விமர்சனம்
அவரை தொடர்ந்து முக்குலத்தோர் படைத்தலைவர் கருணாஸும் போலீசாரை கண்டமேனிக்கு பொது மேடையில் விமர்சித்துள்ளார். அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர் டவுசரை கழட்டிவிடுவேன், என்னுடன் மோத தயாரா என சவால் விடுத்துள்ளார்.

ரவுடி மாதிரி
மேலும் சினிமா படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க இருக்காங்க. ரவுடி பசங்க மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு பின்னாடி ரவுடி மாதிரி பத்து பேரை வச்சுகிட்டு சுத்துனா மனதில் என்ன ஜமீன்தார் என்று நினைப்பா.. இல்ல குறுநில மன்னர்னு நினைப்பா என்றும் ஏக வசனத்தில் பேசியிருக்கிறார் கருணாஸ்.

எப்படி மரியாதை வரும்?
பொதுமக்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய அரசியல்வாதிகளே பொதுவெளிகளில் காவல்துறை அதிகாரிகளை அசிங்கப்படுத்துவதும், அவர்களுக்கு சவால் விடுவது மற்றும் கொலை மிரட்டல் விடுவதும் நியாயமா? அரசியல் தலைவர்கள் இப்படி நடந்துகொண்டால் மக்களுக்கு எப்படி காவல்துறையினர் மீது மரியாதை வரும்? கண்டுகொள்ளுமா அரசு?
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications