நெல்லையில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு... பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டதற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி : மகேந்திரகிரி குறித்து செய்தி வெளியிட்டதாக பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளக்ரள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகில்வெடிச்சத்தம் கேட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விண்வெளி ஆய்வு மையம் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய தலைமுறை செய்தியாளர் ராஜூகிருஷ்ணா மற்றும் நாகராஜன், தினகரன் செய்தியாளர் அகியோர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொய்யான செய்தியெனில் விண்வெளி ஆராய்ச்சி மையம் மறுப்பு கொடுத்திருக்கலாம், அதனை விடுத்து பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தும் விதமாக புகார் கொடுத்திருப்பதையும் அதை அப்படியே காவல்துறை வழக்காக பதிவு செய்திருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை மிரட்டிப் பார்க்கும் செயல் என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்துயுள்ளது.
இதே போன்று தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை போராட தூண்ட வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications