தமிழகம் மற்றும் புதுவையில் மழை வருமாம்... சென்னை வானிலை மையம் சந்தோஷ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. நேற்று இரவு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் பெயுத மழையால் அங்கு நிலவி வந்த தண்ணீர் பஞ்சம் ஓரளவுக்குத் தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tamilnadu and Puducherry may get rain announced chennai meteorological center

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu and Puducherry may get rain announced chennai meteorological center

கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இனியும் தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிரந்தரமாகத் தீரும் என மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu and Puducherry may get rain announced chennai meteorological center and In chennai during night there will be raining.
Please Wait while comments are loading...