தென்னிந்தியாவின் முதல் ‘டெஸ்ட் டியூப் பேபி’ கமலா ரத்னத்திற்கு பிரசவம்... பெண் குழந்தை பிறந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னத்திற்கு நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்களுக்கான சிறப்பு மருத்துவரான டாக்டர் கமலா செல்வராஜ், கடந்த 1990ம் ஆண்டு குழந்தையில்லாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவரை செயற்கை முறையில் கரித்தரிக்கச் செய்தார். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி, அதாவது சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமையுடன் பிறந்தார் கமலா ரத்னம்.

சோதனைக் குழாய் மூலம் கரித்தரிக்க வைத்ததின் மூலம் பிறந்த கமலா ரத்னம் எதிர்காலத்தில் சாதாரண பெண்களைப் போல் வாழ்க்கை நடத்த இயலுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது அந்த சந்தேகங்களையெல்லாம் முறியடிக்கும் வகையில், தனது 24 வயதில் இயற்கையான முறையில் கருத்தரித்து நேற்று 2.8 கி எடையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கமலா ரத்னம்.

இது தொடர்பாக டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில்:-

இந்த நாளுக்காக தான் நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 24 வருடங்களுக்கு முன் கமலா பிறந்த போது பல்வேறு விதங்களில் அச்சங்கள் எழுப்பப்பட்டது. அவளால் சகஜமான வாழ்க்கையை வாழ முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்குமா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது' எனத் தெரிவித்தார்.

கமலா ரத்னத்தின் பிரசவத்திற்காக, மருத்துவமனையின் பிள்ளைப்பேறு அறைக்குள் காலை 9 மணிக்கு சென்ற கமலா 7 மணி நேரங்கள் உள்ளேயே இருந்து, குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க கடும் சிரத்தை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+