திண்டிவனத்தில் உண்ணாவிரதம் தொடங்கிய சபரிமாலா... நேரில் சந்தித்தார் திருமாவளவன்!
நீட் தேர்வை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
திண்டிவனம் : நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா ஜெயகாந்தன் செக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
அனிதாவின் தற்கொலை கல்வி எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வர வலியுறுத்தியும் விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை சபரிமாலா வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நேற்று முன் தினம் பள்ளி வளாகத்தில் தன்னுடைய 7 வயது மகனுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னந்தனியாக போராட்டம்
காலை 9 மணி முதல் அவர் தன்னந்தனியாக போராடி வந்த நிலையில் அரசு ஊழியர் அரசை எதிர்த்து போராடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தனது ஆசிரியைப் பணியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

சமூக கோபம்
தன்னுடைய சமூக கோபத்தை வெளிப்படுத்த தடையாக இருக்கும் அரசுப் பணி தனக்குத் தேவையில்லை இல்லை தேசம் தான் முக்கியம் என்று சபரிமாலா கூறியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்தும் ஒரே கல்வி முறையை வலியுறுத்தியும், சபரிமாலா செக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
Recommended Video


திருமாவளவன் சந்திப்பு
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் சமூக நீதிக்காக போராடி வரும் சபரிமாலா ஆசிரியையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

உறுதுணையாக இருப்போம்
நியாயமான விஷயத்திற்காக போராடும் சபரிமாலாவிற்கு உறுதுணையாக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் சபரிமாலாவின் முடிவை ஆதரித்து வரவேற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications