வெப்பச் சலனத்தால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
சென்னை : தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு 40 டிகிரி வரை கொளுத்திய வெயில் தற்போது சற்று தணிந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சியில் 38.2 டிகிரி வெயில் பதிவானது. நாகப்பட்டினம், பாளையங்கோட்டையில் 38 டிகிரி, மதுரை 37.4 டிகிரி, கரூரில் 37 டிகிரி, சென்னையில் 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 10 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை 8 செ.மீ., தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், பெரியகுளத்தில் 7 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனிடையே, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications