தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல்... ஒரே நாளில் ரூ 100 கோடிக்கு ‘சரக்கு’ விற்று டாஸ்மாக் சாதனை
சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மதுவிற்பனையாகி சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி வரும் 22-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மற்றும் ஓட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலையொட்டி 10 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மட்டும் ரூ 100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மொத்தக் கடைகள்....
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் ரூ.57 கோடி முதல் ரூ.60 கோடி வரை மது விற்பனையும், அதுவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகியும் ஆகி வருகின்றன.

பண்டிகை நாட்கள்...
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கும். அந்த வகையில், கடந்த 13-ந்தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையிலும், மறுநாளான 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று ரூ.100 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிராந்தி, விஸ்கி, ரம்....
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளான பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவை 2 லட்சத்து 14 ஆயிரம் பெட்டிகளும், பீர்பாட்டில்கள் 1 லட்சத்து 27 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன.

ரூ 970ம் கோடிக்கு விற்பனை...
இதன் மூலம் இம்மாதம் தொடக்கத்திலிருந்து கடந்த 14-ந்தேதி வரை ரூ.970 கோடிக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் பீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனை இன்னும் அதிகரிக்கும்...
தேர்தல் நெருங்கிக்கொண்டு இருப்பதால், மதுவிற்பனையும் வழக்கத்தை விட 10 சதவீதம் கூடுதலாக விற்பனை ஆவதாக தெரிகிறது. அதிலும் மூன்று நாட்கள் மது விற்பனைக்கு தடை உள்ளதால் வரும் இரண்டு நாட்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பதுக்கலைத் தடுக்க...
மது விற்பனைத் தடை நாட்களில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்வதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications