ரூ.100 பெரிதா... ரூ 1,000 பெரிதா? டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடிமகன்
டாஸ்மாக் குடிமகன் போதையில் ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி: டாஸ்மாக்கில் 1,000 ரூபாய் நோட்டுக்கு சரக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன் டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மோடியின் அறிவிப்பு சாதாரண மக்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். பணம் கையில் இருந்தும் அத்யாவசிய பொருட்கள் வாங்கக் கூட மக்கள் வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் 1,000 ரூபாய் நோட்டுக்கு சரக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்துள்ளது. நேற்று முன்தினம் கோபியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன் ஒருவர், 1,000 ரூபாய் நோட்டை கொடுத்து சரக்கு கேட்டார்.
அதற்கு டாஸ்மாக் கடையில் இருந்த ஊழியர் 1,000 ரூபாய் நோட்டை செல்லாது என வாங்க மறுத்து சரக்கு இல்லை எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொருவர் 100 ரூபாய் நோட்டு கொடுத்து சரக்கு வாங்கிச் சென்றார். இதைப் பார்த்த 1,000 ரூபாய் கொண்டு வந்த குடிமகன் அந்த கடை ஊழியரைப் பார்த்து ரூ.100 பெரிதா? ரூ.1,000 பெரிதா? அவருக்கு மட்டும் ஏன் சரக்கு கொடுக்கிறீர்கள்? எனக்கு தரக் கூடாதா? என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசினார். சிறிது நேரத்தில் போதை தெளிந்தவுடன் ரூ.1,000 நோட்டை கிழித்து விட்டோமே என கதறி அழுதார். நல்ல நோட்டை மாற்றுவதற்கே மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் பழைய 1,000 ரூபாய் நோட்டை குடிமகன் ஒருவர் கிழித்து வீசியது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications