குவார்ட்டர் விலை இன்றுமுதல் 88 ரூபாய் – டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு!
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விலையானது உயர்கின்றது என்ற அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

கடந்த வருடம் உயர்வு:
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த மதுபான ரகங்களின் விலை உயர்த்தப்பட்டது. மதுவுக்கான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டதால் இந்த நடவடிக்கையை அரசு அப்போது மேற்கொண்டது.

உற்பத்தியாளர்கள் கோரிக்கை:
மதுபான உற்பத்தியாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மது உற்பத்தியில் கூடுதல் செலவு ஏற்படுவதால், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்படி மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுவிலை மீண்டும் உயர்வு:
அதை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலையையும் அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் அமல்:
இந்த விலை உயர்வு இன்று காலை 10 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.

குவார்ட்டர் விலை:
சாதாரண ரக மதுவின் 180 மி.லி பாட்டில் விலை தற்போது ரூபாய் 80 க்கு விற்கப்படுகிறது. அதன் விலை ரூபாய் 8 உயர்ந்து இன்று முதல் ரூபாய் 88 க்கு விற்பனை செய்யப்படும்.

ஆப் பாட்டில் விலை:
தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படும் சாதாரண மது அரை பாட்டில் விலை ரூபாய் 16 அதிகரிக்கப்பட்டு ரூபாய் 176 க்கு விற்கப்படும்.

புல் பாட்டில் விலை:
சாதாரண ரக முழு பாட்டில் விலை 32 ரூபாய் கூட்டப்பட்டு உள்ளது. எனவே தற்போது ரூபாய் 320 என்று விற்கப்படும் முழு பாட்டில் இனி ரூபாய் 352 என்று விற்பனை செய்யப்படும்.

அரசிற்கு கூடுதல் வருவாய்:
இந்த மது விலை உயர்வினால் தமிழக அரசுக்கு ரூபாய் 1,000 கோடி முதல் ரூபாய் 1,800 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மது விலையின் புதிய பட்டியல், அனைவரும் பார்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே ஒட்டப்படும்.

10 பேர் கொண்ட குழு:
சரியான விலையில் மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு தற்போது மாவட்டம் தோறும் 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நடவடிக்கைகளை சோதனையிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications