டாஸ்மாக் மேலாண் இயக்குனராக கிர்லோஷ்குமார் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த மகேஸ்வரனுக்கு பதிலாக கிர்லோஷ்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 134 இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், நேற்று 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் வெளியிட்ட அறிவிப்பில், '' டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த சி.என்.மகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
மேலும், மகேஸ்வரன் கூடுதலாக கவனித்து வந்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் பொறுப்பும் கிர்லோஷ்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications