தேர்தல் நடத்தை விதி: டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க தடை
நெல்லை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால உடனடியாக நடந்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்து விட்டன. இதனால் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரே கட்டமாக 24ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. இதையடுத்து நடந்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. சட்டம் ஓழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு மேல் வழங்க கூடாது என்றும், ஓரே நபருக்கு மொத்தமாக சரக்குகளை வழங்க கூடாது என்றும் டாஸ்மாக் மாநில நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காலை 10 மணிக்கு முன்பாகவும், இரவு 10 மணிக்கு பிறகும் பார்களிலோ, பிற இடங்களிலோ மது விற்க கூடாது. மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி நடந்தால் அதற்கு அந்த கடை சூப்பர்வைசர்களே பொறுப்பு என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்கும் போது வாக்காளர்களை கவருவதற்காக மது பாட்டில்களை அரசியல் கட்சியினர் மொத்தமாக வாங்கி வைப்பதை தடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை டாஸ்மாக் மண்டல மேலாளர் கூறும்போது "தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பொருட்டு டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு மேல் வழங்க வேண்டாம் என்றும், மொத்தமாக மதுபானங்களை வழங்க கூடாது என்றும் சூபர்வைசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று .தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications